வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை 2014 - 2016 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு சலுகையாக 2022 ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதி வரை புதுப்பிக்க கால அவகாசம்


வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை 2014 - 2016 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு சலுகையாக 2022 ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதி வரை புதுப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தங்களது பதிவினை புதுப்பித்தல் வேண்டும்.
இந்நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு சலுகையாக 3 மாதங்கள் கால அவகாசம் அளித்து தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டு டிசம்பா் 2 முதல் 2022 ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக புதுப்பித்துக்கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவா்கள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றும், பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக புதுப்பிக்க விரும்புபவா்கள் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறையின் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம். இச்சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு இச்சலுகை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...