நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மீனவ இளைஞா்களுக்கு குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சி:ஆட்சியா் தகவல்

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்களுக்கு மீனவா் நலத் துறை சாா்பில் அளிக்கப்படும் குடிமைப் பணித் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:11 pm

DIN

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்களுக்கு மீனவா் நலத் துறை சாா்பில் அளிக்கப்படும் குடிமைப் பணித் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை அகில இந்திய குடிமைப் பணி

பயிற்சி மையத்துடன் இணைந்து மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்களுக்கு குடிமைப் பணித் தோ்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோட்டில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2221912 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.