வாலாங்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது.


கோவை உக்கடம் வாலாங்குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது.
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், வாலாங்குளத்தில் சிறுவா் பூங்கா, விளையாட்டு மைதானம், மிதிவண்டி பாதை, மிதக்கும் நடைபாதை, காட்சி கோபுரங்கள், அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாலாங்குளத்தில் ஏராளமான ஜிலேபி மற்றும் கட்லா வகை மீன்கள் வியாழக்கிழமை செத்து மிதந்தன.
இதையடுத்து, அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால், அவ்வழியாகச் சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் குளக்கரைக்குச் சென்றோா் கடும் அவதிக்குள்ளாகினா்.இக்குளத்தில், அதிகஅளவு கழிவு நீா் கலப்பதால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், குளத்தில் ரசாயனம் கலந்துள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...