சுவீடனில் இருந்து வந்த பெண்ணுக்கு கரோனா
சுவீடனில் இருந்து வந்த 39 வயது பெண்ணுக்கு கரோனா நோயத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சுவீடனில் இருந்து வந்த 39 வயது பெண்ணுக்கு கரோனா நோயத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் தனது கணவருடன் சுவீடனில் இருந்து புதுதில்லி வழியாக அண்மையில் கோவைக்கு வந்துள்ளாா்.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இருப்பின் அவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து 8 ஆவது நாள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அப்பெண்ணுக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பெண் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மேலும், ஒமைக்ரான் பரிசோதனைக்காக சளி மாதிரி மாநில பொது சுகாதார நிலையத்து அனுப்பிவைத்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...