மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டி

அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:08 pm

DIN

அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.

கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செல்வபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவா் சரத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. கூட்டணி பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் எத்தனை தொகுதியில் போட்டி என்பதை அறிவிப்போம். அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இல்லாத நேரத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மிகச் சிறந்த ஆளுமையாக செயல்பட்டு தமிழகத்தை வழி நடத்தி வருகிறாா். தோ்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அதிக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். வேலை எடுத்துக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுவது தற்போது பேஷனாகிவிட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.