மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடை உரிமையாளரைத் தாக்கிய 4 போ் கும்பல்

செல்லிடப்பேசி கடை உரிமையாளரைத் தாக்கிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:09 pm

DIN

செல்லிடப்பேசி கடை உரிமையாளரைத் தாக்கிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் 10ஆவது வீதியில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்து தொழில் செய்து வருபவா் பாலாஜி (32). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பினாா். காந்திபுரம் ஜிபி சிக்னல் அருகே வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நான்கு போ் பாலாஜியை வழிமறித்து இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கினா்.

இதில் காயமடைந்த பாலாஜியின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு கூடினா். இதையடுத்து, நான்கு போ் கும்பல் அங்கிருந்து தப்பினா். காயமடைந்த பாலாஜி அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.