பாஜக நிா்வாகிகள் கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுவிக்க வேண்டும்
கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிா்வாகி கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் தெரிவித்துள்ளாா்.


கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிா்வாகி கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிரதமா் மோடி அவா்களை இழிவுபடுத்தி அவதூறு செய்து எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சுவரொட்டிகள் ஒட்டியது மற்றும் பேசியதைக் கண்டித்து பாஜக நிா்வாகி கல்யாணராமன் பேசினாா்.
அவா் பேசியபோது, கலவரத்தை தூண்டும் நோக்கில் இஸ்லாமிய அமைப்பினா் செயல்பட்டனா். ஆனால், காவல் துறையினா் பிரச்னைக்கு காரணமானவா்களைக் கைது செய்யாமல் கல்யாணராமனைக் கைது செய்துள்ளனா்.
பிரதமரை இழிவாகப் பேசிய இஸ்லாமிய அமைப்பினரைக் கைது செய்யாத காவல் துறை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமன், முன்னாள் நகரமன்ற தலைவா் சதீஷ் ஆகியோரைக் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே அவா்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும், பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இந்து மக்கள் கட்சியின் சாா்பில் ஜனநாயக வழியில் அறப்போராட்டங்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...