மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வேளாண்மைக் கல்லூரிகளில் பிப்ரவரி 8இல் வகுப்புகள் தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் பிப். 8ம் தேதி இளநிலை பிரிவுகளுக்கான வகுப்புகள்  தொடங்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. முதல்வா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:09 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் பிப்ரவரி 8ஆம் தேதி இளநிலை பிரிவுகளுக்கான வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதல்வா் (வேளாண்மை) மற்றும் தலைவா் (மாணவா் சோ்க்கை) மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ளஅனைத்து கல்லூரிகளிலும் பிப்ரவரி 8ஆம் தேதியில் இருந்து இளநிலை பிரிவுகளுக்கு வகுப்புகளை தொடங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை பிரிவைச் சோ்ந்த இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்குகிறது.

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் பிப்ரவரி 8ஆம் தேதியில் இருந்தே செயல்படும். பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.