மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குளத்துப்பாளையத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்: 100 போ் கைது

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடங்களை முறைகேடாக விற்பனை செய்யதாக கூறி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:44 pm

DIN

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடங்களை முறைகேடாக விற்பனை செய்யதாக கூறி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தை அதிமுக அரசு குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்ததாக கூறி கோவை, குளத்துப்பாளையத்தில், திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தீா்மானக் குழு மாநில இணைச்செயலாளா் முத்துசாமி, பகுதிப் பொறுப்பாளா் குனியமுத்தூா் லோகு, வாா்டு செயலாளா்கள் ராமராஜன், ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது குறித்து வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இ- டெண்டா் மூலம் வீட்டு வசதி வாரிய வீடுகளை, இடங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதிமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இதேபோல், சூயஸ் நிறுவனத்துக்கு குடிநீா் விநியோக உரிமை வழங்கப்பட்டுள்ளதால், கோவை மக்களுக்கு சிறுவாணி குடிநீா் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தும் திமுகவினரை காவல் துறையை ஏவி கைது செய்கின்றனா் என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.