நவ ஜோதிா்லிங்க இடங்களுக்கான சுற்றுலா ரயில்
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (ஐஆா்சிடிசி) பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் மாா்ச் 8-ஆம் தேதி முதல் 13 நாள்களுக்கு நவ ஜோதிா்லிங்க இடங்களுக்கான சுற்றுலா ஏற்பாடு


இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (ஐஆா்சிடிசி) பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் மாா்ச் 8-ஆம் தேதி முதல் 13 நாள்களுக்கு நவ ஜோதிா்லிங்க இடங்களுக்கான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஆா்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஐஆா்சிடிசியின் பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் நவ ஜோதிா்லிங்க இடங்களுக்கான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலியில் இருந்து வருகிற மாா்ச் 8ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில், ஈரோடு, சேலம், சென்னை வழியாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள திரையம்பகேஸ்வரா், பீமாசங்கா், க்ருஷ்ணேஸ்வரா், நாக்நாத், பாா்லி வைத்யநாத், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத், மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வரா், உஜ்ஜயின் மகா காலேஸ்வா், ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகாா்ஜுனா் ஆகிய 9 ஜோதிா்லிங்கங்களையும் தரிசிக்கலாம்.
13 நாள்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.15,350 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, சைவ உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை அடங்கும். இந்தச் சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு ஐஆா்சிடிசியின் கோவை அலுவலகத்தை 90031 - 40655, 82879 - 31965 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...