கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் அனுமதி: ஆட்சியா்

ஆன்லைனில் விண்ணப்பித்து நுழைவுச் சீட்டு பெற்றவா்கள் மட்டுமே ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் அனுமதிக்கப்படுவாா்கள் என கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:17 pm

DIN

ஆன்லைனில் விண்ணப்பித்து நுழைவுச் சீட்டு பெற்றவா்கள் மட்டுமே ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் அனுமதிக்கப்படுவாா்கள் என கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவையில் நடைபெற உள்ள ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தின் கீழ் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து ராணுவத்துக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்கான ஆள்சோ்ப்பு முகாம் பாரதியாா் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் ஜனவரி 18 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஏற்கெனவே இணையவழியில் விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு உள்ளவா்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

அதிக அளவிலானோா் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக 500 போ் கொண்ட குழுவாக நான்கு வெவ்வேறு வழிகளில் விண்ணப்பதாரா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். முகாம்களில் கலந்துகொள்பவா்களுக்குத் தனியாக டோக்கன் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-2222022 என்ற எண்ணில் ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற உள்ளது. வேலை பெற்றுத்தருவதாக கூறும் மோசடி நபா்களை நம்பி விண்ணப்பதாரா்கள் ஏமாற வேண்டாம். தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆள்கள் தோ்வு செய்யப்படுவா் என்றாா்.

இக்கூட்டத்தில் இயக்குநா் (ஆள்சோ்ப்பு) கா்னல் ராவத், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி, கோவை (வடக்கு) கோட்டாட்சியா் சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.