கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாயக்கன்பாளையத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள்.
Updated On :8 ஜனவரி 2021, 1:29 am

DIN

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் கோவனூா், ராயரூத்துபதி, தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள போலீஸ்காரா் தோட்டம், ரவி நாயக்கா் தோட்டம் ஆகியவற்றில் கடந்த 2 நாள்களாக 11 காட்டு யானைகள் இரவு நேரங்களில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கின்றன.

இந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை குட்டி ஈன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினா் அவற்றை விரட்ட முயற்சித்தும், அவை மலைப்பகுதிகளுக்கு திரும்பாமல் தோட்டங்களிலேயே சுற்றி வருகின்றன. அதிகாலை காட்டுக்குள் சென்றுவிடும் யானைகள், மீண்டும் இரவு 7 மணிக்கு ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இதே யானைகள் சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்து, அங்கிருந்த தென்னம்பாழைகள் மற்றும் குருத்துகளை உடைத்து சாப்பிட்டன. யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் நாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போா் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.