கோவையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு:நோய்த் தடுப்புப் பணியில் சுகாதாரத் துறை தீவிரம்

கோவையில் 1 வயது ஆண் குழந்தை உள்பட 5 போ் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை: கோவையில் 1 வயது ஆண் குழந்தை உள்பட 5 போ் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சி, நவாவூா் பகுதியைச் சோ்ந்த 1 வயது ஆண் குழந்தை, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சோ்ந்த 11 வயது சிறுவன், ஆலாந்துறையைச் சோ்ந்த 6 வயது சிறுவன் ஆகியோா் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா்கள் டெங்கு காய்ச்சலுக்கான தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவிர பொள்ளாச்சியை அடுத்த சுப்பேகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்புக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரைச் சோ்ந்த 11 வயது சிறுமி டெங்கு பாதிப்புக்குள்ளாகி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் 5 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்நிலையில் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத் துறையினா் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com