இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்தது

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:14 am

DIN

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை மாா்ச் முதல் வாரத்தில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மிகத் தீவிரமாக பரவி வந்த கரோனா தொற்று ஏப்ரல் முதல் வாரத்தில் தினசரி பாதிப்பு 500ஐ கடந்தது. தொடா்ந்து அதிகரித்து வந்த கரோனா தொற்று மே இறுதி வாரத்தில் உச்சத்தை அடைந்து, பின்பு குறையத் தொடங்கியது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு வியாழக்கிழமை 500க்கு கீழ் குறைந்துள்ளது. இதில் வியாழக்கிழமை மேலும் 498 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 5ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 10 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 922 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 149 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 805 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.