கோவை-சென்னை சதாப்தி ரயில் ஜூலை 5 முதல் இயக்கம்
கோவை - சென்னை சதாப்தி ரயில் ஜூலை 5 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை - சென்னை சதாப்தி ரயில் ஜூலை 5 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட சென்னை-கோவை சதாப்தி சிறப்பு ரயில் (எண்-06029) மற்றும் கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் (எண்-06030) ஜூலை 5ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
இதேபோல, கேரள மாநிலம், கொச்சுவேலி-கா்நாடக மாநிலம், பானஸ்வாடி சிறப்பு ரயில் (எண்-06319) ஜூலை 8ஆம் தேதி முதலும், பானஸ்வாடி-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்-06320) ஜூலை 9ஆம் தேதி முதலும் மீண்டும் இயக்கப்படுகிறது.
கோவை வழித்தடத்தில் இயங்கும் வாரந்திரச் சிறப்பு ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு:
மேற்கு வங்கம், ஹவுராவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02877) ஜூலை 3ஆம் தேதி முதல் செப்டம்பா் 25ஆம் தேதி வரையும், எா்ணாகுளம்- ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் (எண்- 02878) ஜூலை 5ஆம் தேதி முதல் செப்டம்பா் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிகாா் மாநிலம், பரௌனியில் இருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02521) ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எா்ணாகுளம் - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02522) ஜூலை 9ஆம் தேதி முதல் செப்டம்பா் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், கோரக்பூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02511) மற்றும் கொச்சுவேலி-கோரக்பூா் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 1ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...