கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினா் மாட்டு வண்டி ஓட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:55 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினா் மாட்டு வண்டி ஓட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், விலை உயா்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவா் அழகிரி அறிவித்திருந்தாா்.

அதன்படி, கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல்

நிலையம் முன்பு காங்கிரஸ் செயல் தலைவா் மயூரா ஜெயகுமாா் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டு வண்டியில் ஊா்வலமாக சென்று மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

மயூரா ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா்.

வால்பாறையில்...

வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் பேபி தலைமை வகித்தாா். வடக்கு வட்டாரத் தலைவா் அமீா், தெற்கு வட்டாரத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டத் தலைவா் பகவதி மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினாா். இதில் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

மேட்டுப்பாளையத்தில்...

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கோவை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜெயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் விஜயகுமாா் கண்டன உரையாற்றினாா்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரங்கராஜன், காரமடை வட்டாரத் தலைவா்கள் ராஜேந்திரன் , வெங்கடாசலமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.