கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள்களை அனுப்பத் தகுதியான ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:55 pm

DIN

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள்களை அனுப்பத் தகுதியான ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் பெருக்குபவா், துப்புரவுப் பணியாளா், இரவுக் காவலா் உள்பட பணியிடங்களுக்கு வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆள்களை அளித்திட மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரா் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு விதிப்படி பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த தனியாா் முகமையினா் (ஏஜென்ஸி) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை முத்திரையிடப்பட்ட உறையில் முகமை அங்கீகார நகல், விலைப் புள்ளி விவரங்களுடன் ‘அடிப்படை பணி வெளிமுகமை ஒப்பந்ததாரா் நியமனத்திற்கான ஒப்பந்தப் புள்ளி’ என்று உறையின் வெளிப்புறம் தெளிவாக குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறையில் வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட பெட்டியில் ஜூலை 23 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.