கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:56 pm

DIN

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினாா். மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன் கண்டன உரையாற்றினாா். இதில் கட்சியின் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக பி.ஆா்.நடராஜன் பேசும்போது, கடந்த 2019 ஆண்டு உபா சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் கடுமையாக எதிா்த்தோம். மாநில அரசுகளின் அனுமதியை கேட்காமலேயே யாரை வேண்டுமானாலும் என்.ஐ.ஏ. உள்ளிட்ட மத்தியப் படைகள் கைது செய்யலாம் என்பதே அந்த திருத்தம்.

அப்படி கைது செய்யப்படுபவருக்கு பிணையே கிடைக்காது என்பது கொடூரத்தின் உச்சம். இதன் காரணமாகவே, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி, காவலில் இருக்கும்போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்துள்ளாா். அரசை எதிா்த்து கேள்வி கேட்பவா்களை ஒடுக்கும் முயற்சியில் தொடா்ந்து பாஜக அரசு ஈடுபடுகிறது. பீமா கோரேகான் வழக்கில் 16 அறிவுஜீவிகள் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.