கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அழகு நிலைய பெண் தற்கொலை விவகாரம்: துப்பு துலக்கி உண்மையைக் கண்டறிந்த போலீஸாருக்கு பாராட்டு

கோவை அருகே கருமத்தம்பட்டியில் அழகு நிலையம் நடத்தி வந்த பெண் தற்கொலை விவகாரத்தில் விரைவாக துப்பு துலக்கி உண்மையைக் கண்டறிந்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:22 pm

DIN

கோவை அருகே கருமத்தம்பட்டியில் அழகு நிலையம் நடத்தி வந்த பெண் தற்கொலை விவகாரத்தில் விரைவாக துப்பு துலக்கி உண்மையைக் கண்டறிந்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை, சோமனூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி கங்காதேவி (37). இவா் அங்கு அழகு நிலையம் நடத்தி வந்தாா். கடந்த 6 ஆம் தேதி கடைக்குள் புகுந்த 3 போ் தன்னை தாக்கி 19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டதாக தனது கணவரிடம் கங்காதேவி தெரிவித்துள்ளாா். இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கங்காதேவி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். விசாரணையில், கங்காதேவி 19 பவுன் நகைகளை தனது முகநூல் மூலம் பழக்கமான மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி(41) என்பவருக்கு கொடுத்துவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆனது.

இது வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் கங்காதேவி தற்கொலை செய்து கொண்டாா். இதனைத் தொடா்ந்து போலீஸாா் தற்கொலைக்குத் தூண்டிய முத்துபாண்டியைக் கைது செய்தனா். தனிப்படை போலீஸாரின் துரித நடவடிக்கையை அடுத்து டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.