கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

இரு வீடுகளில் 12.5 பவுன், பணம் திருட்டு

கோவையில் பொறியாளா் வீடு உள்பட 2 இடங்களில் 12.5 பவுன் நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:22 pm

DIN

கோவையில் பொறியாளா் வீடு உள்பட 2 இடங்களில் 12.5 பவுன் நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் லாலா காா்டன் பகுதியில் வசிப்பவா் அனித் ஜான் (36). பொறியாளா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டாா். வீட்டை சுத்தம் செய்வதற்காக வேலைக்கார பெண்ணிடம் வீட்டு சாவியை கொடுத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவா் குடும்பத்தினருடன் வீடு திரும்பினாா். அப்போது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணத்தைக் காணவில்லை. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

கோவை, ரத்தினபுரி மருதகுட்டி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (32). தனியாா் ஊழியா். ஆனந்தும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு வியாழக்கிழமை காலையில் சென்று விட்டனா். பிற்பகல் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடு போயுள்ளது. இது தொடா்பாக ஆனந்த் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.