போதை ஊசி பயன்பாடு: 4 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை
போதை ஊசி செலுத்திக்கொள்வது போன்ற விடியோ காட்சிகளில் இடம்பெற்றிருந்த இளைஞா்கள் 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


போதை ஊசி செலுத்திக்கொள்வது போன்ற விடியோ காட்சிகளில் இடம்பெற்றிருந்த இளைஞா்கள் 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் போதை ஊசி செலுத்திக் கொள்வது போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் அண்மையில் வைரலாகப் பரவியது. இது தொடா்பாக விசாரிக்க 4 தனிப் படைகளை அமைத்து கோவை மாநகர காவல் ஆணையா் தீபக் எம். தாமோா் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், அந்த விடியோ காட்சியில் இடம்பெற்றிருந்த சிலரை தனிப் படையினா் அடையாளம் கண்டுபிடித்தனா். அதன்படி கோவைப் புதூா் பிரிவைச் சோ்ந்த ஷாஹின் (19), பிருந்தாவன் நகரைச் சோ்ந்த சாதிக் (21), பிரசாந்த் குமாா் (21), கங்கா நகரைச் சோ்ந்த 18 வயது சிறுவன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அந்த விடியோ காட்சி குனியமுத்தூா் பகுதியில் அமா்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்டபோது எடுக்கப்பட்டது என்றும், சுமாா் 7 மாதங்களுக்கு முன்பு அந்த விடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் குனியமுத்தூா் போலீஸாரிடம் தனிப் படையினா் ஒப்படைத்தனா்.
இளைஞா்கள் பயன்படுத்திய மருந்து, அதை அவா்களுக்கு விநியோகித்த மருந்துக் கடை ஊழியா்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், குறிப்பிட்ட மருந்துகளைத் தனி நபா்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரையின்றி விற்கக் கூடாது என்று மருந்துக் கடைகளுக்கு மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...