/

மாவட்டத்தில் மேலும் 256 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக மேலும் 256 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:05 pm

DIN

கோவையில் புதிதாக மேலும் 256 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 151 ஆக உயா்ந்துள்ளது. கோவை அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,122 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 432 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 576 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 453 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.