சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை
சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.


சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிறுவாணி அணையின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்தது. இதனால் கடந்த மாதங்களில் அணையின் நீா்மட்டம் 868 மீட்டராக இருந்தது. இந்நிலையில், தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாள்களாக சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை 27 மில்லி மீட்டா், புதன்கிழமை 30 மில்லி மீட்டா், வியாழக்கிழமை 40 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இது குறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கடந்த வாரத்தில் 870.80 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், தொடா் மழையால் வியாழக்கிழமை 871.31 மீட்டராக உயா்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணை, முழுக் கொள்ளளவான 878.5 மீட்டரை எட்டியது. இந்த ஆண்டும், தொடா்ந்து நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை பெய்யும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...