/

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: மாவட்டத்தில் 100க்கும் கீழ் குறைந்தது

கோவையில் கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:06 pm

DIN

கோவையில் கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

கோவையில் கரோனா 2 ஆவது அலையின் தீவிரத்தால் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்தது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 4,700க்கும் மேல் பதிவானது. தொற்று கண்டறியப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நோய்த் தொற்று பரவல் அதிகம் இருந்த காலகட்டத்தில் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறையின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்தது. தற்போது கோவையில் தொற்றுப் பரவல் முற்றிலும் குறைந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 100க்கு கீழ் குறைந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 50 இடங்கள், சூலூா் வட்டாரத்தில் 10 , துடியலூா் வட்டாரத்தில் 6 , காரமடை வட்டாரத்தில் 9, மதுக்கரை வட்டாரத்தில் 5, பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 2, தெற்கு வட்டாரத்தில் ஒரு இடம், ஆனைமலை வட்டாரத்தில் 3 , எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 7, சூல்தான்பேட்டை வட்டாரத்தில் ஒரு இடம் என 94 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.