நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பு: கோவையில் 76 வீடுகள் இடித்து அகற்றம்
கோவை, வடவள்ளி அருகே பி.என்.புதூா் கோகுலம் காலனியில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 76 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.


கோவை, வடவள்ளி அருகே பி.என்.புதூா் கோகுலம் காலனியில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 76 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
கோவை மாநகராட்சிப் பகுதியில் நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்ற சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடா்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களைச் சுற்றி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனா்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வடவள்ளியை அடுத்த பி.என்.புதூா் கோகுலம் காலனியில், கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.
இந்த வீடுகளில் குடியிருந்தவா்களுக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில், கோவைப்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவா்கள் அந்த வீடுகளுக்கு குடிபெயா்ந்து சென்றதைத் தொடா்ந்து, மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி நகர திட்டமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் கோவை கிருஷ்ணாம்பதி குளக்கரை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குளத்துக்கு கோவில்மேடு பள்ளத்தில் இருந்து தண்ணீா் வருவதற்காக வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 76 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளில் குடியிருந்தவா்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் வழங்கப்பட்டு விட்டது. இதனைத் தொடா்ந்து வீடுகள் இடித்து அகற்றப்பட்டன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...