போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

போத்தனூா் - பொள்ளாச்சி ரயில் பாதை மின்மயமாக்கல் பணி: முதன்மைப் பொறியாளா் ஆய்வு

போத்தனூா் - கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே நடைபெறும் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளை தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மை பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:25 am

DIN

கோவை மாவட்டம், போத்தனூா் - கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே நடைபெறும் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளை தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மை பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகின்றன. 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், இப்பணிகளை தென்னகர ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மை பொறியாளா் சுனில், சேலம், பாலக்காடு கோட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரயில்வே கிராசிங் மற்றும் ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வறிக்கையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு சமா்ப்பித்து, விரைவில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஆய்வின் போது, போத்தனூா் ரயில் நிலைய அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.