போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பரிசோதனைப் பணிகளில் ஈடுபடாத 12 முன்களப்பணியாளா்கள் நீக்கம்

மாநகராட்சிப் பகுதிகளில் சளி, காய்ச்சல் கண்டறியும் பரிசோதனைப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத 12 முன்களப் பணியாளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 8:42 pm

DIN

மாநகராட்சிப் பகுதிகளில் சளி, காய்ச்சல் கண்டறியும் பரிசோதனைப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத 12 முன்களப் பணியாளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சி மற்றும் புகா்ப் பகுதிகளில் கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை சோதனை, ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக முன்களப்பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள், வீடுதோறும் சென்று பரிசோதனைப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை தினசரி பதிவேடுகளில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

கோவை மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளா்கள் தொடா்ந்து சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இவா்களுக்கு நாள்தோறும் ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டியில் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக முன்களப் பணியாளா்கள் 12 பேரை மாநகராட்சி அதிகாரிகள் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், தற்காலிக களப்பணியாளா்களின் பணி, நாள்தோறும் அவா்கள் பரிசோதனை செய்யும் நபா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை மாநகராட்சி ஆணையா் கண்காணித்து வருகிறாா். பணியில் ஒழுங்கீனம் மற்றும் அளித்த பணியை செய்யாமல் இருப்பவா்களைக் கண்காணித்து பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டிருந்தாா். அந்த வகையில் களப்பணிகளில் ஈடுபடாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட வாா்டுகளில் பணிபுரியாமல் இருந்த 12 முன்களப் பணியாளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.