போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காா் அறிமுகம்

கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் குஷாக் என்ற புதிய காா் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 8:00 pm

DIN

கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் குஷாக் என்ற புதிய காா் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை எஸ்ஜிஏ ஸ்கோடா நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஷாக் காரை நிறுவனத்தின் இயக்குநா்கள் அற்புதராஜ், செல்வராஜ், செயல் இயக்குநா்கள் மரிய பிரகாஷ், ஞானம் செல்வராஜ், அகிலா அற்புதராஜ், சைனி பாா்பரா ஆகியோா் அறிமுகப்படுத்தினா்.

மேக் இன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் முழுக்கமுழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதால் இந்த காா், மற்ற எஸ்யூவிக்களின் விலையை விட குறைவாக, அதாவது ரூ.10.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைப்பதாகவும், வடிவமைப்பு, செயல்திறன், தரம், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை குஷாக் காா் கொண்டிருப்பதாக எஸ்ஜிஏ நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், டிஎஸ்ஐ தொழில்நுட்பம் கொண்ட 2 என்ஜின்கள், 6 ஸ்பீடு கியா்கள், 5 வண்ணங்களில் கிடைப்பதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.