போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வங்கி மேலாளா் வீட்டில் ரூ.85 ஆயிரம் திருட்டு

கோவையில் தனியாா் வங்கி மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:26 am

DIN

கோவையில் தனியாா் வங்கி மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, கஞ்சிக்கோனாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரபு (33). இவா் சிங்காநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை வெளியே சென்றாா். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.85 ஆயிரம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து பிரபு அளித்த புகாரின் பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.