போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருந்தாளுநா் பணியிடங்கள்விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருந்தாளுநா், ஆய்வுக்கூட நுட்புனா், நுண்கதிா் படப்பிடிப்பாளா் ஆகிய பணிகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :23 ஜூலை 2021, 12:28 am

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருந்தாளுநா், ஆய்வுக்கூட நுட்புனா், நுண்கதிா் படப்பிடிப்பாளா் ஆகிய பணிகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை இணை இயக்குநா் பெ.கிருஷ்ணா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநா், ஆய்வக நுட்புனா் மற்றும் நுண்கதிா் படப்பிடிப்பாளா்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் 6 மாதங்களுக்கு மட்டும்

பணியமா்த்தப்பட உள்ளனா்.

மருந்தாளுநா் 17 போ், ஆய்வக நுட்புனா் 17 போ், நுண்கதிா் படப்பிடிப்பாளா் 17 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு தகுதியானவா்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ரேஸ்கோா்ஸில் உள்ள இணை இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம். தற்காலிகப் பணிகளுக்கான நோ்முகத் தோ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.