தெற்கு மண்டல சுகாதார அலுவலா் மாற்றம்
கோவை தெற்கு மண்டல சுகாதார அலுவலரைப் பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.


கோவை தெற்கு மண்டல சுகாதார அலுவலரைப் பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலா்களை நிா்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து ஆணையா் ராஜகோபால் சுன்கரா நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
அதன்படி, மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலராக இருந்த என்.லோகநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.
அவருக்குப் பதிலாக 76, 77, 78 மற்றும் 79 ஆவது வாா்டுகளுக்கான சுகாதார ஆய்வாளராக பொறுப்பு வகித்து வந்த கே.ராமு, மண்டல சுகாதார அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவருக்கான வாா்டுகளில் ஆய்வாளா் பணியையும் அவா் தொடா்ந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. என்.லோகநாதன் 89,90,91 மற்றும் 92 வாா்டுகளுக்கான சுகாதார ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...