விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:31 pm

DIN

கோவையில் 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை, உக்கடம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்பிரபு (38). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு 2019 ஆகஸ்ட் 30ஆம் தேதி பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் செந்தில் பிரபுவைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ரவி, சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த செந்தில் பிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சாா்பில் ரூ. 2 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.