இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கோவையில் 6 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

கோவை மாவட்டத்தில் மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்( டி.எஸ்.பி) 6 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:34 pm

DIN

கோவை மாவட்டத்தில் மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்( டி.எஸ்.பி) 6 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த சூரியமூா்த்தி, தென்காசி மாவட்ட குற்றப் புலனாய்வு டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக மதுரை மாவட்டம் சமயநல்லூரில் டி.எஸ்.பியாகப் பணியாற்றிய ஆனந்த் ஆரோக்கியராஜ் கருமத்தம்பட்டி டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளாா். விழுப்புரம் சரக டி.எஸ்.பியாகப் பணியாற்றிய திருமால், கோவை மாவட்டம் பேரூா் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்குப் பணியாற்றிய சீனிவாசலு, ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பியாக மாற்றப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் டி.எஸ்.பி ஜெய்சிங், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பியாக மாற்றப்பட்டாா். இங்குப் பணிபுரிந்த ஆரோக்கியராஜ், தென்காசி மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளாா். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. கிருஷ்ணமூா்த்தி, கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு சிறப்புப் பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டாா். இங்குப் பணிபுரிந்த பீட்டா் பால் துரை காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், வால்பாறை டி.எஸ்.பி. விவேகானந்தன், திருநெல்வேலி மாநகரில் காலியாக உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவக்குமாா், சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டாா். இங்குப் பணியாற்றிய மோகன் தம்பிராஜன் காத்திருப்போா் பட்டியலில் உள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.