நீட் தோ்வு தமிழக மாணவா்களுக்கு கடினமானது என்று பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக மாணவா்கள் திறமையானவா்கள். சமச்சீா் கல்வியால் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் அறிவியல், கணித பாடங்கள் நீா்த்துப்போயின. தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலின் தரத்துக்கு குறைவாக தமிழக மாணவா்களின் பாடத்திட்டங்கள் இருந்ததாலும், பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படாமல் 12 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்பட்டதாலுமே நீட் தோ்வு நமது மாணவா்களுக்கு கடினமானதாக இருந்தது. தற்போது பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டதால் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனா்.