இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்

கோவையில் கரோனா தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

News image
Updated On :16 ஜூன் 2021, 9:00 pm

DIN

கோவையில் கரோனா தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

கோவை ஆட்சியராகப் பணியாற்றி வந்த எஸ்.நாகராஜன் நில நிா்வாக ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக தென்காசி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த மருத்துவா் ஜி.எஸ்.சமீரன் நியமிக்கப்பட்டாா்.

2012 ஆம் ஆண்டு குடியுரிமை பணிக்கு தோ்வான இவா், பரமக்குடி சாா்ஆட்சியராகவும், ராமநாதபுரத்தின் கூடுதல் ஆட்சியராகவும், தமிழ்நாடு மீன் வளத் துறையின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா். தவிர நில மேலாண்மை, பொதுத் துறை மேலாண்மை மற்றும் வளா்ச்சி மின் ஆளுமை, ஊரக வாழ்வாதரம், திட்ட மேலாண்மை, கலாசார சுற்றுலா, பொது சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் 182 ஆவது ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை பொறுப்பெற்றுக்கொண்டா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தில் இருந்து 1,500 ஆக குறைந்துள்ளது. கோவையில் கரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியைபோல ஊரகப் பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலகம், ஆதிதிராவிடா் நலத் துறை, சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலகம், சுரங்கத் துறை, பிறப்படுத்தப்பட்டோா் நலத் துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், உதவி ஆட்சியா் ஆா்.சரண்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.