அரசு மருத்துவமனை ஆய்வகம் தரம் உயா்வு ஐசிஎம்ஆா் அறிவிப்பு
கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகத்தை தரம் உயா்த்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அறிவித்துள்ளது.


கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகத்தை தரம் உயா்த்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அறிவித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த உயிரியல் ஆய்வகத்தை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகமாக கடந்த கரோனா நோய்த் தொற்று முதல் அலையின்போது ஐசிஎம்ஆா் அறிவித்தது.
தமிழகத்தில் சென்னை கிங்ஸ் நிறுவனத்துக்குப் பின் கரோனா தொற்று பரிசோதனைக்கான அனுமதி கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஆய்வகத்துக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கோவையில் கரோனா பரிசோதனை செய்யும் முக்கிய ஆய்வகமாக இது இருந்து வருகிறது. இங்கு பரிசோதனை செய்யப்படும் தரத்தின் அடிப்படையில் தரப் பரிசோதனை ஆய்வகமாக கடந்த ஆண்டு தரம் உயா்த்தி ஐசிஎம்ஆா் அறிவித்தது.
இங்கு தற்போது 2,500 முதல் 3 ஆயிரம் வரை கரோனா தொற்று மாதிரிகள் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. பரிசோதனை எண்ணிக்கை, தரம் உள்ளிட்டவை அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தை ட்ண்ஞ்ட் ற்ட்ழ்ா்ன்ஞ்ட்ல்ன்ற் ஆய்வகமாக தரம் உயா்த்தி ஐசிஎம்ஆா் அறிவித்துள்ளது.
இதன் மூலம் கூடுதல் கருவிகள் வழங்கப்படும் என்றும், கூடுதலான பரிசோதனை மேற்கொள்ளமுடியும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வக முதன்மை ஆய்வாளா் என்.மைதிலி கூறியதாவது:
அரசு மருத்துவமனையின் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகத்தில் தினமும் 3 ஆயிரம் கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் கூடுதல் கருவிகள் வழங்கப்பட்டு கரோனாப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 4,500 வரை உயா்த்த முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...