கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
கோவையில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.


கோவையில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவை, ரத்தினபுரி ஆா்.கே.நகா் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில் அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பிச்சுமணி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...