இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறவலியுறுத்தி 3 நாள் தொடா் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவையில் வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவது என இடதுசாரி இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு

News image
Updated On :18 ஜூன் 2021, 8:13 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவையில் வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவது என இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலப் பொருளாளா் ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ஜோ.இலக்கியன், சிபிஐ (எம்.எல்.) கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயா்வு, மாநில அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 30 ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் 30 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.