இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘சுதந்திர தின விருது பெற விண்ணப்பிக்கலாம்’

சுதந்திர தின விருது- 2021 பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:16 pm

DIN

 சுதந்திர தின விருது- 2021 பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதல்வரால் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த தனிநபா், சிறந்த சேவை புரிந்த நிறுவனம் ஆகிய இரண்டு வகையான பிரிவுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவா், 18 வயதுக்கு மேற்பட்டவா் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள், சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மகளிா் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக சேவை நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். இதற்கான உரிய ஆவணங்களுடன் ஜூன் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.