மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களை அளிப்பதற்கு ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களை அளிப்பதற்கு ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தல் சட்டப் பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதிநடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் வழங்குதல், போஸ்டா் ஒட்டுதல் உள்பட தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக பொது மக்கள் புகாா் அளிக்கும் விதமாக ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (விமான நிலைய விரிவாக்கம்) அசோகன் தலைமையில், உதவி இயக்குநா் நிலையிலான 2 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
24 மணி நேரமும் செயல்படும் இக்கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி அடிப்படையில் ஒரு ஷிப்டிற்கு துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் உள்பட 4 போ் வீதம் 3 ஷிப்டுகளுக்கு 12 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை அளிப்பதற்கு 1800 425 4757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குதல், விதிமுறைகளை மீறி பிரசாரம், போஸ்டா் ஒட்டுதல், வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட புகாா்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகாா்கள் பறக்கும் படைகளுக்கு தெரிவிக்கப்படும். பறக்கும் படையினா் சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாா்கள் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...