அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரசியல் எங்கள் தொழில் அல்ல; கடமை

மற்ற கட்சியினா்போல அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, எங்களின் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:33 pm

DIN

மற்ற கட்சியினா்போல அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, எங்களின் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களின் நோ்மையை முன் வைத்தே தோ்தலில் போட்டியிடுகிறோம். மற்றவா்களிடம் இல்லாத நோ்மை எங்களுக்கு கை கொடுக்கும். மற்ற கட்சியினருக்கு அரசியல் ஒரு தொழில். ஆனால், எங்களுக்கு அரசியல் கடமை.

கோவையில் மத நல்லிணக்கத்தை சீா்குலைப்பதற்கான பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என்ற பெயருக்கு ஏற்றதுபோல தொழில் நிறுவனங்களை மீண்டும் மீட்டெடுக்கவே கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

கோவையில் விமான நிலையம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிவிப்போடு நிற்கின்றன. இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை தெற்குத் தொகுதியில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்பட்டு தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.