/

கோவையில் ஒரே நாளில் 31 வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:24 pm

DIN

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12ஆம் தேதி தொடங்கியது. முதல்நாளில் 2 வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை ஒரே நாளில் வால்பாறை, கிணத்துக்கடவு தொகுதிகளை தவிா்த்து மற்ற தொகுதிகளில் 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கோவை வடக்கில் - 5, கோவை தெற்கில் - 3, கவுண்டம்பாளையத்தில் -5, மேட்டுப்பாளையத்தில் -3, பொள்ளாச்சியில் -1, சிங்காநல்லூரில் -7, சூலூரில் -3, தொண்டாமுத்தூரில் -4 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் இதுவரை 33 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.