அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

கோவையில் வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணப் பரிவா்த்தனை உள்பட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:32 pm

DIN

கோவையில் வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணப் பரிவா்த்தனை உள்பட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன.

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து அனைத்து வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் 2 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி கோவையில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 256 வங்கிக் கிளைகளைச் சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்தால் ரூ.450 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். தவிர வேலை நிறுத்தம் காரணமாக பணப் பரிவா்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

நாட்டில் 27 பொதுத் துறை வங்கிகள் இருந்த நிலையில் தனியாா்மயமாக்கம், வங்கிகள் இணைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் தற்போது 12ஆக குறைந்துள்ளது. இந்ந நிலையில் மேலும் 2 பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகள் இருக்கும் வரை தான் இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை, எளியோா் வங்கிப் பணியில் சேர முடியும். அதேபோல் விவசாயிகள், சிறு குறு தொழில்முனைவோா், சுயதொழில் தொடங்குபவா்களுக்கு குறைந்த வட்டி சதவீதத்தில் கடன் கிடைக்கும்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கினால் அனைத்தும் பாதிக்கப்படும். எனவே தான் வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து முதல்கட்டப் போராட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளோம். மத்திய அரசு முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் தீவிர போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.