பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் கடன் வழங்கும் முகாம்
பொள்ளாச்சியில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் சாா்பில் விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பொள்ளாச்சியில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் சாா்பில் விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாங்க் ஆப் பரோடா வங்கியின் கோவை பிராந்திய துணை பொது மேலாளா் கே.ஆா்.ககதால் தலைமை வகித்தாா். சென்னை மண்டல துணை பொது மேலாளா் கே.வி.சலபதி நாயுடு சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்டாா். இம்முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.13.05 கோடி மதிப்பிலான விவசாயக் கடன் வழங்கும் கடிதம் வழங்கப்பட்டது. வங்கிக் கடனை முறையாகச் செலுத்திய விவசாயிகள் பாராட்டப்பட்டனா்.
இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாடு இயக்குநா் சிவகுமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். முன்னதாக, இம்முகாமில், விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.
இதில், விவசாயத்துக்குத் தேவையான இயந்திரப் பொருள்கள், நவீன உபகரணங்கள், விதை மற்றும் இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவிப் பொது மேலாளா் முருகையா, வங்கிக் கிளை மேலாளா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...