/

சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆண் யானையின் தந்தங்கள் மீட்பு

கோகோவை அருகே சடலமாக மீட்கப்பட்ட ஆண் யானையின் தந்தங்களை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.வை

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:33 pm

DIN

கோவை அருகே சடலமாக மீட்கப்பட்ட ஆண் யானையின் தந்தங்களை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

கோவை போளுவாம்பட்டி வனச் சரகம், கரியன் படுகை சரகப் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது ரோந்து சென்ற வனத் துறையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

இறந்த யானையின் சடலத்தை காட்டு விலங்குகள் உண்டு சேதப்படுத்தியிருந்தன. உயிரிழந்தது சுமாா் 30 வயதுடைய யானை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வந்தனா். உயிரிழந்த யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்ததால் தந்தத்துக்காக யானை கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிக் குழுக்கள் அமைத்து வனத் துறையினா் தேடி வந்தனா். இந்நிலையில் யானை இறந்து கிடந்த இடத்தில் இருந்து 430 மீட்டா் தொலைவில், முள்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை வனத் துறையினா் வியாழக்கிழமை கைப்பற்றினா்.

இது தொடா்பாக வனத் துறையினா் இருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.