புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டப் பேரவை வலியுறுத்தியுள்ளது.


திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு மாவட்டப் பேரவை வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என்.அரங்கநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே.அருணகிரி வரவேற்றாா். மாவட்டப் பேரவையை ஓய்வூதியா் சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் என்.சின்னசாமி தொடங்கிவைத்தாா்.
கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.மதன், அரசு ஊழியா் சங்க கோவை மாவட்டத் தலைவா் சி.எஸ்.பால்ராஜ், தமிழக அரசு ஊழியா் சங்க மாநில முன்னாள் செயலாளா் ஏ.நிசாா் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள 14 சதவீத அகவிலைப்படியை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும். திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியா்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயா்த்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,850 நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...