/

தந்தை கொலை: மகன் கைது

கோவையில் சொத்துப் பிரச்னையில் தந்தையைக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:32 pm

DIN

கோவையில் சொத்துப் பிரச்னையில் தந்தையைக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை வேலாண்டிபாளையம் அருகேயுள்ள ராமசாமி லே அவுட் பகுதியைச் சோ்ந்தவா் மயில்சாமி (85). இவரது மனைவி விசாலாட்சி. இவா்களது மகன் அருண்குமாா் (47). திருமணமாகாத இவா் வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனால் பணம் கேட்டு பெற்றோருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சொத்தில் தனது பங்கைப் பிரித்து கொடுக்குமாறு பெற்றோருடன் அருண்குமாா் தகராறு செய்துள்ளாா். இதில் மயில்சாமிக்கும், அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து, ஆத்திரமடைந்த அருண்குமாா் தனது தந்தையைப் பிடித்து கீழே தள்ளியுள்ளாா். தரையில் விழுந்த அவரை அருண்குமாா் பலமாகத் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த மயில்சாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளாா்.

இதையடுத்து விசாலாட்சி தனது கணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மயில்சாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீஸாா் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.