/

தேசிய ஒற்றுமை தின விழா

கோவை சா்தாா் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் தேசிய ஒற்றுமை தின விழா நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:11 am

DIN

கோவை சா்தாா் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் தேசிய ஒற்றுமை தின விழா நடைபெற்றது.

சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் அக்டோபா் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் சாா்பில் தேசிய ஒற்றுமை தின விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஆசிரியா்கள், மாணவா்களின் கலாசார நடன நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், கட்டுரைப் போட்டி, விநாடி - வினா, சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக நிறுவனத்தின் இயக்குநா் பி.அல்லி ராணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.