ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பீமா கோரேகான் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவையில் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்


பீமா கோரேகான் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவையில் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் தலைமை வகித்தாா். ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலா் அ.அசரப் அலி, மாநிலப் பொருளாளா் வழக்குரைஞா் கே.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் பி.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாநிலக் குழு உறுப்பினா் பி.சக்திவேல், மாவட்ட துணைத் தலைவா் குழந்தைவேல், மாவட்டப் பொருளாளா் பி. சற்குணம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சி.சிவசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...