ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்

 கோவை குஜராத் ஜாம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் வழங்கினாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:09 pm

DIN

 கோவை குஜராத் ஜாம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் வழங்கினாா்.

சிங்காநல்லூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.காா்த்திக், 53 ஆவது வாா்டு, சி.கே.காலனி மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மழைநீா் வடிகால்களை சீரமைத்தல், பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, 38 ஆவது வாா்டு, பீளமேடு எல்லைத் தோட்டம், ராமசாமி லே-அவுட் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

முன்னதாக, பீளமேடு புரானி காலனியில், கோவை, திருப்பூா் பகுதிகளில் உள்ள தாவூதி போரா முஸ்லிம் அசோசியேஷன் உறுப்பினா்கள் சாா்பில், குஜராத் ஜாம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை நா.காா்த்திக் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பீளமேடு பகுதி திமுக பொறுப்பாளா்கள் பாலசுப்ரமணியம், நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.